• Jan 18 2025

தனி உலகில் இருக்கும் MaPoo.. வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி! குவியும் லைக்ஸ், கமெண்ட்ஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் மிகவும் கிசுகிசுக்கப்பட்டவர்கள் தான் மாயா, பூர்ணிமா.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மாயா பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் எழுந்தது. அவர் ஒரு லெஸ்பியன் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

அதுபோலவே, பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமாவுடன் மாயா நடந்து கொள்ளும் விதம் குறித்தும் தவறாக சித்தரிக்கப்பட்டது.


எனினும், பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற பேமிலி ரவுண்டில் அங்கு வந்த தாய்மார்கள் அனைவரும் மாயாவுக்கு சப்போர்ட் பண்ணினார்கள். என் பிள்ளைக்கும் உன்னைப்போல் நண்பி இல்லையே என அர்ச்சனாவின் அம்மாவும் வருத்தம் தெரிவித்தார்.

அதிலும், பூர்ணிமாவுக்கு மனசு கஷ்டமா இருக்கும் போது, மாயா தான் ஓடிவந்து அவரை அனைத்து ஆறுதல் சொன்னார். அது பலராலும் ரசிக்கப்பட்டது.


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மாயாவுக்கு, பூர்ணிமா மேள தளத்துடன் சிறப்பு வரவேற்ப்பு கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது மாயா பூர்ணிமாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இருவரும் மாறி மாறி தமது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார்கள்.

இவர்களின் நட்பை பார்த்து ஒரு சிலர் தப்பாக பேசினாலும், அவர்களுடைய நட்பு பலராலும் ரசிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement