விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை சீரியலும் ஒன்று. இந்நிலையில், இந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில், முத்து கிரிஷோட அம்மா உயிரோட இருக்கிறா.. அவளோட கரெக்டர் தப்பானது... அவள் பார்க்கிற வேலையும் தப்பானது என ரோகிணியைப் பார்த்துச் சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி நீங்க வீணா ஒரு பொண்ணு மேல பழியை போட்டுக் கொண்டிருக்கீங்க என்கிறார்.

அதைத் தொடர்ந்து முத்து நான் பழி போடல பார்த்ததைத் தான் சொல்லுறேன் என்கிறார். அதுக்கு ரோகிணி இல்ல நீங்க தப்பா பழி போடுறீங்க என்று பிடிவாதமாக இருக்கிறார். மேலும் இப்படி ஒரு பொண்ணு மேல பழி போட அசிங்கமா இல்லையா என்று கேட்கிறார் ரோகிணி.
பின் முத்து கிரிஷோட அம்மா தப்பானவள் தான் என கோபமாக கத்துறார். அதைக் கேட்ட ரோகிணி கோபத்தோட நீங்க சொல்லுறது முழுக்க பொய்... ஏன் என்றால் கிரிஷ் என்னோட பையன்.. அவன் என்னோட வயித்தில பிறந்தவன் என்று சொன்னதைக் கேட்ட உடனே மனோஜ் அவரை வெளியில அனுப்பிவிடுறார். இதுதான் இனி நிகழவிருப்பது...
Listen News!