• Mar 26 2026

அடேங்கப்பா.! ஆஸ்கர் பட்டியலில் இடம்பிடித்தது ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சாப்டர் 1’..

shali / 2 months ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் வெளியாகி, இந்திய சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்த படங்களில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கர்நாடகாவில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

நாட்டுப்புற மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள், கலாச்சார அடையாளங்கள் மற்றும் வலுவான கதையமைப்பு ஆகியவற்றின் மூலம், ‘காந்தாரா’ ஒரு சாதாரண திரைப்படமாக இல்லாமல், ஒரு கலாச்சார நிகழ்வாகவே மாறியது.


காந்தாரா படத்தின் மகத்தான வெற்றியை தொடர்ந்து ‘காந்தாரா சாப்டர் 1’ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியது. முதல் பாகத்தின் தாக்கத்தையும், அதன் ஆழமான உலகத்தையும் மேலும் விரிவுபடுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த படம், வெளியான நாள் முதல் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது, ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி, சினிமா ரசிகர்களுக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்த திரைப்படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement