• Apr 28 2024

விஜய் குறித்த அந்த விஷயத்தை ட்வீட் செய்த மனோபாலா... ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்திருக்கும் திரைப்படம் 'வாரிசு'. இப்படமானது ஜனவரி 12-ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். 


அந்தவகையில் 'தளபதி 67' என்று அழைக்கப்படும் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக நடிகரும், இயக்குநருமான மனோபாலா நேற்றைய தினம் ட்விட்டரில் தெரிவித்தார்.

அதாவது தளபதி 67 படம் பற்றி மனோபாலா ட்விட்டரில் கூறியதாவது "தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியது...லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன்... அதே எனர்ஜி, ஃபுல் ஸ்விங்... முதல் நாளே....தூள்" என்றார். 


அவரின் இந்த ட்வீட்டை பார்த்தவர்களோ "ஓ படப்பிடிப்பு தொடங்கிவிட்டதா, அப்டேட் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார். இதே மாதிரி நிறைய அப்டேட்டை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் மனோபாலா.


மேலும் "என் ட்வீட்டை நீக்கிவிட்டேன். மன்னித்துவிடுங்கள்" என்று ட்வீட் செய்தார் மனோபாலா. அதை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது "அடி பலமா, ரொம்ப திட்டிவிட்டார்களா?. நீங்கள் ட்வீட்டை நீக்கிவிட்டால் என்ன, எங்களிடம் தான் ஸ்கிரீன்ஷாட் இருக்கே. நீங்கள் ட்வீட்டை நீக்குவீர்கள் என்று தெரிந்து தானே ஸ்கிரீன்ஷாட்டே எடுத்தோம்" என கிண்டலாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது அந்த ட்வீட்டை வைரலாக்கியும் வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement