• Oct 09 2024

தமன்னாவை அந்தரத்தில் தொங்கவிட்டு அலறவிட்ட சுந்தர் சி.. அதிர்ச்சி வீடியோ

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’அரண்மனை 4’ படத்தின் படப்பிடிப்பின்போது தமன்னாவை அந்தரத்தில் தொங்கவிட்டு சுந்தர் சி அலறவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சுந்தர் சி நடித்த இயக்கிய ’அரண்மனை 4’ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ளனர் என்பதும் இந்த படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இணையத்தில் வைரலான நிலையில் நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்றும் ’அரண்மனை’ படத்தின் மற்ற மூன்று பாகங்களை விட இந்த படம் வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’அரண்மனை 4’  படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த சில காட்சிகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டுள்ள நிலையில், அதில் ஒரு வீடியோவில் தமன்னா அந்தரத்தில் கயிறு கட்டி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கீழே இருந்து இரண்டு பேர் மேலே இருந்து இரண்டு பேர் தூக்கும் ரிஸ்க்கான காட்சி உள்ளது.

பொதுவாக இதுபோன்ற ரிஸ்க்கான காட்சிகளில் பெரிய நடிகைகள் நடிக்க மாட்டார்கள் என்பதும் டூப் வைத்துதான் படமாக்குவார்கள் என்ற நிலையில் தமன்னா ரிஸ்க் எடுத்து இந்த காட்சியில் டூப் இன்றி நடித்துள்ளார்.  இந்த படத்தில் நடித்தது நான் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த படம் நிச்சயம் பார்ப்பவர்களை அலற வைக்கும் என்றும் இந்த படம் என் திரையுலக வாழ்வில் மறக்க முடியாத படம் என்றும் தமன்னா இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


Advertisement