• Apr 01 2025

நடிகை மஞ்சிமா மோகன் எப்போது சலூன் கடை வைத்தார்? வைரல் வீடியோ..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் மஞ்சிமா மோகன் எப்போது சலூன் கடை வைத்தார்? என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எப்ஐஆர் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சிமா மோகன்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மஞ்சிமா மோகன் இன்ஸ்டாகிராமிலும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ளார். அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும்

இந்த நிலையில் தனது நெருங்கிய குடும்ப நண்பர் கோபிநாத் திரவியம் என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிகை அலங்காரம் செய்யும் வீடியோவை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘இவர் எப்போது சலூன் கடை வைத்தார்’ என்று காமெடியாக கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். 



Advertisement

Advertisement