• Jan 18 2025

ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன். டெல்லியில் ஆஜராக உத்தரவு.. கைது செய்யப்படுவாரா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

போதைப்பொருள்  கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீரை விசாரிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னால் டெல்லியில் போதைப்பொருள் கடத்தியதாக மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்வது ஜாபர் சாதிக் என்று தெரிய வந்ததாக செய்திகள் வெளியானது. 

இதனை அடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவான நிலையில் சமீபத்தில் அவரை பிடித்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை தான் இயக்குநர் அமீர் இயக்கி வந்தார் என்ற வகையில் அமீருக்கும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தம் இருக்குமா என்று கேள்வி எழுந்தது.  

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஜாபர் சாதிக் போதைப்பொருள்  வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் டெல்லியில் உள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இந்த சம்மனுக்கு அமீர் ஆஜராகவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரிடம் விசாரணை செய்யும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் தகுந்த ஆதாரம் இருந்தால் அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement