• Oct 08 2024

இணையவாசிகளை கதறவிட்டு பட்டாசு வாங்கி மகிழும் மணிமேகலை? அதுவும் எங்கே தெரியுமா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் படுஜோராக ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் தற்போது மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக பங்கு பற்றியவர்தான் மணிமேகலை. இந்த சீசனில் குக்காக களம் இறங்கி இருந்தார்  பிரியங்கா. ஆனால் தனது வேலையை செய்ய விடாமல் தொகுப்பாளினி ஒருவர் இடையூறு செய்வதாக கூறி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருந்தார்.

இதற்கு காரணம் பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பல குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனாலும் அந்த நிகழ்ச்சியில் உண்மையாக நடந்தது இதுதான் என குக் வித் கோமாளியில் பங்கு பற்றிய பிரபலங்கள் ஒவ்வொருவராக தமது கருத்துக்களை வீடியோ மூலம் வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், இதை பற்றி எதையும் பொருட்படுத்தாமல் மணிமேகலை தனது யூட்யூப் பக்கத்தில் அடுத்தடுத்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். மேலும் தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்குவதற்காக சிவகாசிக்கு தன்னுடைய கணவருடன் சென்றுள்ளார்.


குறித்த வீடியோவின் ஆரம்பத்திலேயே தனக்கு சப்போர்ட்டாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அடுத்தடுத்த வீடியோக்களில் பேசலாம் என்று மணிமேகலை கூறி உள்ளார்.

சமூக வலைத்தள பக்கங்களில் இவர்களுடைய பிரச்சினை பற்றி எரியும் நிலையில் பிரியங்கா ஒரு பக்கம் வெளியூர் சென்று உள்ள நிலையில், தற்போது மணிமேகலையும் தனது கணவருடன் பட்டாசுகளை வாங்கி மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement