• Sep 26 2026

பூமியில் ஒரே ஸ்டார் அது நம்ம சூப்பர் ஸ்டார் தான்.. அனிருத் இசையில் தெறிக்கும் 'ஹண்டர் வண்டார்' பாடல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன்  திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதன் காரணத்தினால் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக் குழுவினர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

வேட்டையன் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ரஜினி மற்றும் மஞ்சு வாரியரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று மாலை வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹசன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். கூலி படம் பற்றிய அப்டேட்களும் அவ்வப்போது வெளியாகிக் கொண்டுள்ளன.


இந்த நிலையில், இன்றைய தினம் வேட்டையன் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கில் வெளியாகி ரசிகர்களின் கவனம்  பெற்றுள்ளது. தற்போது குறித்த பாடல் youtube சேனல்களில் பல வியூவர்ஸ்களை அள்ளி உள்ளது.


Advertisement

Advertisement