தமிழ், தெலுங்கு படங்களில் நடன அமைப்பாளராக காணப்பட்டவர் தான் ஜானி மாஸ்டர். இவர் திருச்சிற்றம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். தற்போது பெண் நடன கலைஞர் ஒருவர் அளித்துள்ள புகாரின் காரணமாக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் பற்றி பல பெண்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், கேரள அரசு ஹேமா கமிட்டி அறிக்கை மூலத்தை வெளியிட்டதோடு பல முன்னணி சினிமா பிரபலங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் புட்ட பொம்மா , மேகம் கருக்காதா , காவாலா , அரேபிக் குத்து உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களில் நடனக்கலைஞராக பணியாற்றிய ஜானி மாஸ்டர் மீது அவருடன் பணியாற்றிய பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜானி மாஸ்டர் மீது ஹைதராபாத் போலீசார் போக்ஸோ மற்றும் மூன்று வழக்குகளை பதிவு செய்து ஹைதராபாத் பொலிஸாரால் ஜானி மாஸ்டர் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில் ஜானி மாஸ்டரின் மனைவி இந்த விவகாரத்தில் அதிரடியாக சில கருத்துக்களை தற்போது தெரிவித்திருக்கிறார்.
அதன்படி அவர் தெரிவிக்கையில், ஜானி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் சிறுமியாக இருந்த காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடினார்.. அப்போது சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார் .
ஹைதராபாத்தில் திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக சேர்வதற்கு பணம் கூட கட்ட முடியாமல் இருந்தார். ஜானி தான் அந்த பெண்ணுக்கு பண உதவி செய்தார். அவர் ஹீரோயினாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் ஜானி மாஸ்டர் தனது படங்களில் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்தார். இப்போது அந்தப் பெண் ஜானி மீது புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு ஆதாரம் இருக்கின்றதா? அவர்கள் நெருக்கமாக இருந்ததை யாரும் பார்த்தார்களா? அப்போதே ஏன் அந்தப் பெண் இதை வெளியே சொல்லவில்லை.
அதன் பின்பும் எதற்காக ஜானியிடம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுப்பியவர், இந்த புகார் நிரூபிக்கப்பட்டால் நான் எனது கணவரை விட்டு விலகவும் தயாராக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
Listen News!