• Jan 18 2025

தலைவர் 171 படத்தில் மம்முட்டி... இது என்ன புது கதையா இருக்கு... ஜெயிலர் பற்றி பலருக்கும் தெரியாத தகவலை போட்டு உடைத்த மம்முட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மம்முட்டி. சுமார் 35 வருடங்களுக்கும் மேல் அவருக்கான இடம் என்பது அப்படியே இருக்கிறது. 70 வயதாகியும் இப்போதும் மலையாளத்தில் ஆக்டிவாக நடித்து வரும் நடிகர் இவர். தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஜெயிலர் திரைப்படம் தொடர்பில் இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு தகவலை வெளிப்படையாக பேசியுள்ளார்.


நடிகர் ரஜனிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வினாயகன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மம்முட்டிதான். அவரிடம் ரஜினியே பேசி சம்மதம் வாங்கி எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால், அந்த கதாபாத்திரத்தின் நெஞ்சில் ரஜினி எட்டி உதைப்பது போல காட்சிகள் இருந்ததால் ‘உங்களை வைத்து அப்படி காட்சி எடுக்க முடியாது’ என ரஜினியே அவரிடம் சொல்லிவிட்டார். எனவே, மலையாள நடிகர் வினாயக் அதில் வில்லனாக நடித்திருந்தார்.


ரஜினி இப்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இப்படத்தை முடித்தபின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் பற்றி இப்போதே பலரும் பேச துவங்கிட்டனர்.


லியோ படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் கதையை கவனமுடன் லோகேஷ் கனகராஜ் எழுதி வருகிறார். இந்த படத்தில் நடிக்க படக்குழு மம்முட்டியை அணுகியிருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவியது. தளபதிக்கு பின்னர் ரஜினியுடன் மம்முட்டி இந்த படத்தில் நடிக்கிறாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்தது.


இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்த மம்முட்டி ‘தலைவர் 171 படக்குழு என்னை அணுகவில்லை. அது முற்றிலும் பொய்யான செய்தி’ என தெரிவித்துள்ளார். அதேநேரம் அந்த படத்தில் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும் மம்முட்டி கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement