• Apr 16 2026

மீண்டும் அதிரடியாக என்ட்ரி கொடுத்த மாலினி..செழியனுக்கு விவாகரத்து உறுதி! ஜெனியின் அப்பா ஆவேசம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதன்படி, செழியனை பார்த்து நேரில் கதைக்க வேண்டும் என்று ஜெனியின் அப்பா ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.


செழியனும் சந்தோசமாக அந்த இடத்திற்கு வருகை தந்திருக்க, அந்த நேரம் பார்த்து மாலினி மீண்டும் வந்து செழியன் அருகில் இருந்து கதைக்கிறார்.


இதையடுத்து, ஜெனியின் அப்பாவும் அங்கு வர, இருவரும் பேசிக் கொண்டுருப்பதை பார்த்து அதிர்ச்சியடைய, மாலினியும் பொய் சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து ஜெனியின் அப்பா, இனி என்ன செய்யணும் என்று எனக்கு தெரியுமென கோவமாக செல்கிறார். வீட்டிற்கு வந்த செழியன் பாக்கியாவை கட்டிப்பிடித்து நடந்தவற்றை சொல்லி அழுகிறார். 


Advertisement

Advertisement