• Jan 19 2025

தமிழ்த் திரையுலகில் மற்றுமொரு பழம்பெரும் நடிகர் மறைவு! பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவிப்பு

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான ரா சங்கரன் 92 ஆவது வயதில் இன்று காலமானார். இவர் மெளன ராகம் படத்தில் சந்திரமெளலி என்ற கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

 'ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு' என்ற 1974ம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான்ரா சங்கரன். தொடர்ந்து படங்களை இயக்கிய போதும், அவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

மேலும், மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக சந்திரமெளலி கேரக்டரில் நடித்து பிரபலமானார். அந்தக் காட்சி இப்போதும் பார்ப்போரை ரசிக்க வைக்கும். 


எனினும், அவர் இறுதியாக 1999ம் ஆண்டு வெளியான அழகர்சாமி படத்தில் நடித்திருந்தார். மேலும், இயக்குநர் பாரதிராஜா ரா சங்கரனிடம் உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். 

இந்த நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரா சங்கரன் மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement