• Jan 18 2025

யாழ் பிரபல ஆலயத்திற்கு சென்ற நடிகை ரம்பா குடும்பம்... வைரலாகும் புகைப்படங்கள் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரை திருமணம் செய்துள்ள தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.


நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா வாழ் புலம்பெயர் முதலீட்டாளராவார். இவரின் முயற்சியின் பயனாக யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி (Nothern uni) தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் நொதேர்ன் யுனியின் அனுசரனையில் டிசம்பர் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 


இந்நிலையில் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்ட புகைப்படங்கள்; வெளியாகியுள்ளன.மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சமய சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சி இன்றைய தினம் சாமி படம் வைக்கப்படவுள்ளது. 

இதோ அந்த புகைப்படங்கள்... 

Advertisement

Advertisement