• Apr 26 2025

முகமூடி அணிந்து பேசும் நடிகர்கள் அதிகம்..சினிமா பற்றிய அதிர்ச்சித் தகவலை பகிர்ந்த மாளவிகா

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார். தற்போது "சர்தார் 2" படத்தில் நடித்து வருகின்றார். சமீபத்திய பேட்டி ஒன்றில் மாளவிகா கலந்து கதைத்த வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 


அதன்போது அவர், "நடிகர்கள் மற்றும் நடிகைகளை திரையுலகில் எவ்வாறு பார்க்கின்றார்கள்" என்பது குறித்து சிறப்பாகப் பேசியுள்ளார். மேலும் "சில நடிகர்கள் பெண்கைளை மதிப்பவர்கள் போன்று கமராவிற்கு முன் காட்டிக்கொள்கின்றார்கள். ஆனால் கமராவிற்குப் பின் பெண்களை வெறுக்கும் பல நடிகர்களை நான் பார்த்திருக்கின்றேன்." என்றும் கூறியிருந்தார்.


அத்துடன், "எல்லா நடிகர்களும் முகமூடி அணிந்து கொண்டு பெண்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதனைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்." என உருக்கமாகப் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாது ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வேறுபாடு சினிமாத்துறையில் வேரூன்றி காணப்படுகின்றது. இது எப்போது முடிவுக்கு வரப்போகிறது? என்று தான் தெரியவில்லை எனவும் வருத்தமாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement