• Apr 30 2024

அற்புதமான இசையை உருவாக்குங்கள்-தேவா தேவா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டாருடன் போஸ் கொடுத்த மாளவிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் தான் தேவா. இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன் படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.


காத்தடிக்குது காத்தடிக்குது... காசிமேடு காத்தடிக்குது... திருப்பதி ஏழுமலை வெங்கடேசா... கவலைப்படாதே சகோதாரா...உள்ளிட்ட ஏராளமான பாடல்களைப் பாடி இருக்கின்றார். அந்த வகையில் இறுதியாக விஜய்யின் தெறி படத்தில்  பாடல் பாடி இருந்தார்.


இந்த நிலையில் இன்றைய தினம் தேவா தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தவிர சென்னையில் தேவா தேவா ன்னும் நிகழ்ச்சியும் நடந்து வருகின்றது.


எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டிருக்கும் நடிகை மாளவிகா சூப்பர் ஸ்டாரர் மற்றும் மீனாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருப்பதோடு எப்போதும் இதுபோன்ற அற்புதமான இசையை உருவாக்குங்கள்!என தேவாவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement