• Jan 18 2025

இந்திரஜா ஜோடிக்கு திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா? முற்றுபுள்ளி வைத்த சங்கர் மகள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலக நட்சத்திரமே வியந்து பார்க்கும் அளவிற்கு அண்மையில் நடைபெற்று முடிந்த திருமணம் தான் ரோபோ ஷங்கரின் மகள் இந்திராஜாவின் திருமண கொண்டாட்டம்.

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும் அவருடைய தாய் மாமன் ஆன அதாவது ரோபோ சங்கர் வளர்த்தெடுத்த கார்த்திக் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் முதல் நயன்தாரா வரை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு காஸ்ட்லியான கிப்ட்களையும் வழங்கி அவர்களை கௌரவித்திருந்தார்கள்.


இந்த நிலையில், இந்திரஜாவின் திருமணம் தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. அதற்கு மனம் நொந்து பதில் கூறியுள்ளார் இந்திரஜா. அதன்படி அவர் கூறுகையில்,


எனது திருமணம் நடப்பதற்கு முன்பிருந்தே எனது தந்தையின் உடல்நிலை குறித்து பல்வேறு விஷயங்கள் இணையத்தில் வெளியானது. அவருக்கு கண்ட பழக்கங்களும் இருக்கிறது என்று கூறி பேசினார்கள். ஆனால் அதற்கு நாங்கள் தொடர்ச்சியாக பதில் அளித்து வந்தோம். தற்போது எனது திருமணத்தின் போது என் தந்தைக்கு நான் கொடுத்த முத்தம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

என்னைப் பெற்ற தந்தைக்குத்தானே நான் முத்தம் கொடுத்தேன். அது தவறா? என்று அதற்கு அப்போதே நான் விளக்கம் கொடுத்திருந்தேன். ஆனால் தற்போது எனது தாய் மாமா கார்த்திக் என்னை திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து செய்து முடிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது போன்ற விஷயங்கள் தங்கள் குடும்பத்தை மனரீதியாக பாதிக்கின்றது என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement