• Apr 24 2024

வெளிநாட்டில் அதிக வசூல் செய்த படங்கள்... என்னது அந்த லிஸ்ட்டில் விஜய், அஜித் இல்லையா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல படங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து தமிழ் சினிமாவில் நிறைய விஷயங்கள் மக்கள் எதிர்ப்பார்ப்பது போல் இடம்பெறுவது இல்லை. 

அந்தவகையில் விஜய் நடித்த 'பீஸ்ட்' மற்றும் அஜித் நடித்த 'வலிமை' போன்ற படங்கள் வசூலில் மிகப் பெரிய சாதனையை நிலை நாட்டும் என ரசிகர்கள் பலரும் நம்பி இருந்தனர். ஆனால் இப்படங்கள் முதலுக்கு நஷ்டமில்லாது, தோல்வி என இல்லாமல் சாதாரண வசூலை மட்டுமே பெற்றது. 

அதேநேரத்தில் இந்த வருடம் வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்', சிவகார்த்திகேயனின் 'டான்' போன்ற படங்கள் சாதாரண வசூலை எட்டும் என பலரும் நினைத்திருந்த நேரத்தில் அதிரடி வசூல் வேட்டை நடத்தி சாதனையை நிலை நாட்டி இருந்தன.


அதுமட்டுமல்லாது இப்போது இளம் இயக்குநரான பிரதீப் இயக்கி, நடித்த 'லவ் டுடே' என்ற திரைப்படமும் படக்குழுவே எதிர்ப்பார்க்காத வகையில் அமோகமான வசூல் வேட்டை நடத்துகிறது. அதாவது ரூ. 5 கோடியில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிய படங்களின் அதிரடியான வசூல் வேட்டை காரணமாக வெளிநாட்டில் அதிகம் வசூலித்த டாப் படங்களின் லிஸ்டில் திடீர் மாற்றம் நடந்துள்ளது. அங்கு இந்த படங்கள் 15 மில்லியன் டாலருக்கு மேல் வசூலித்து இருக்கின்றனவாம். 

அந்தவகையில் தற்போது அங்கு அதிகம் வசூலித்த டாப் 5 படங்களின் விவரம் இதோ..!

பொன்னியின் செல்வன் 1

2.0

விக்ரம்

கபாலி

எந்திரன்

இந்த 5படங்களுமே முதல் நிலையில் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement