• May 18 2025

கங்கை அமரன் பேச்சுக்கு வைரமுத்து போட்ட ட்விட்.. !அனல் பறந்த சண்டை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக காணப்படும் வைரமுத்து ஒரு நல்ல மனிதர் கிடையாது என அவரை எந்த அளவுக்கு  மோசமாக பேச முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக பேசியுள்ளார் கங்கை அமரன். மேலும் இளையராஜாவை பற்றி பேசினால் நடப்பதை வேறு என கூறியுள்ளார்

'படிக்காத பக்கங்கள்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, பற்ற வைத்த தீ குபீரென்று பற்றி கொண்டு இருக்கிறது என்று மறைமுகமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் பேசியது இளையராஜாவின் குடும்பத்தை மிகப்பெரிய கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரமுத்துவை பகிரங்கமாக திட்டி தீர்த்து உள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், வைரமுத்துவை வளர்த்து விட்டதே  நாங்கள் தான். இளையராஜா இல்லை என்றால் வைரமுத்து இல்லை. இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கவே மாட்டார். அவருக்கு கொஞ்சம் கூட நன்றி இல்லை. அவர் நல்ல பாடலாசிரியர். ஆனால் ஒரு நல்ல மனிதர் கிடையாது என்று நேரடியாகவே விளாசி  இருந்தார்.

இந்த நிலையில், கங்கை அமரனின் பேச்சுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் மீண்டும் மறைமுகமாக தாக்கியுள்ளாரா வைரமுத்து என்று கேட்கும் அளவிற்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் ட்விட்  வெளியிட்டுள்ளார் வைரமுத்து.

அதாவது தற்போது சிறு பட்ஜெட் படங்களுக்கு பாடல் எழுதி வரும் வைரமுத்து புதிய படத்தை பாராட்டி எழுதி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கங்கை அமரன் பேச்சுக்கு பதிலடி கொடுங்க என நேரடியாகவே கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

இவ்வாறு இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் இடையே சண்டை பூதாகரமாக வெடித்துள்ளமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement