• Jan 21 2025

பிக் பாஸ் சீசன் 8ஐ தொகுத்து வழங்க வருகிறார் மகாராஜா! இன்னும் 10 நாட்களில் சம்பவம் ஸ்டார்ட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கமலஹாசன் அறிவித்ததில் இருந்து அடுத்து அவரிடத்தை யார் நிரப்ப போகின்றார்கள் என்ற கேள்வி காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து கமலஹாசனுக்கு பதிலாக சிம்பு, சரத்குமார், சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் நயன்தாரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் தாறுமாறாக அடிபட்டது.

இதுவரையில் 7 சீசன்களும் வெற்றிகரமாக கமலஹாசனால் நடத்தி வைக்கப்பட்டது. வார இறுதி நாட்களில் இந்த நிகழ்ச்சியை கமலஹாசனுக்காக பார்ப்பவர்களே ஏராளம். ஒரு வாரம் முழுக்க நடக்கும் பஞ்சாயத்துக்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்ப்பு சொல்வதற்காகவும் தட்டி கேற்பதற்காகவும் கமலஹாசன் வருவார்.  ஒவ்வொரு வாரமும் கமலஹாசன் என்ன சொல்லப் போகின்றார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் போட்டியாளர்களுக்கும் காணப்படும்.

அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை வார நாட்களை விட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பியும் அதிகமாக காணப்படும்.


தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கமலஹாசன் இந்த முறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார் என்ற அவரது முடிவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் கமலஹாசனின் இந்த அறிவிப்பு பல கேள்விகளுக்கு  உள்ளானது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனை யார் தொகுத்து வழங்க போகின்றார் என்ற தகவல் கசிந்துள்ளது.

அதன்படி விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதாகவும் அதற்கு அக்ரிமெண்டில் கையெழுத்திட்டதாகவும் இன்னும் பத்து நாட்களில் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாக போகின்றது என்றும்  தகவல்கள் வெளியாகி உள்ளன

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியில் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாகவும் காணப்படுகின்றது.

Advertisement

Advertisement