தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குநரும் தங்களுடைய தனித்துவமான கதைக்களம், ஸ்டைலிஷ் இயக்கம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கிறார்கள். அந்த வகையில், அபிஷன் ஜீவிந்த் ஒரு விதத்தில் தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் சசிகுமார்–சிம்ரன் நடித்து வெற்றிபெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கியவர். இவர் தற்பொழுது ஹீரோவாக நடித்து வருகின்றார்.

அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘வித் லவ்’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் மதன் எழுதி இயக்கியுள்ளார்.
‘வித் லவ்’ படத்தை எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. அதே நேரத்தில், ஸயான் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணை தயாரிப்பாளர் ஆகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ளார். ஹீரோயினாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையை அமைத்துள்ளார்.‘வித் லவ்’ திரைப்படம் வருகிற பிப். 6, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டம் (teaser) மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்ட பிறகு, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சமீபத்தில், ‘வித் லவ்’ பட விழாவில் கலந்து கொண்ட அபிஷன் ஜீவிந்த், தனது வாழ்க்கை மற்றும் படப்பயணம் குறித்து உருக்கமான கருத்துகளை வெளியிட்டார். அவர் அதன்போது, “நான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கி Famous ஆனதை விட, கல்யாணமாகித் தான் Famous ஆகிட்டன்.” என்று கூறியுள்ளார்.
Listen News!