• Apr 17 2026

யூடியூபில் பட்டையைக் கிளப்பிய துல்கர் சல்மான்- மிருணாள் தாகூரின் ஆல்பம் Song..

shali / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் நடிகர்கள் திரைப்படங்களைத் தாண்டி ஆல்பம் பாடல்களில் நடிப்பது, சமீப காலமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், பிரபல நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள புதிய ஆல்பம் பாடல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த ஆல்பம் பாடலுக்கு இசை உலகின் மாமேதை ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தப் பாடலை அவரது மகன் ஏ.ஆர். அமீன் பாடியுள்ளார். இசை ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு தருணமாக அமைந்துள்ளது.

துல்கர் சல்மான், மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள நடிகர். அவரது ஸ்டைல், இயல்பான நடிப்பு மற்றும் கதாபாத்திரத் தேர்வு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

அதேபோல், நடிகை மிருணாள் தாக்கூர் குறுகிய காலத்திலேயே இந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். இந்த இரண்டு முன்னணி நடிகர்கள் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளதால், அந்த பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement