• Mar 11 2026

என்ன கல்யாணம் பண்ணது தேவயானிக்கு பெரிய பாக்கியம்.. இயக்குநர் ராஜகுமாரன் ஓபன்டாக்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. குடும்பப் பாசம், எளிமை, நடிப்பின் இயல்புத்தன்மை ஆகியவற்றால் “தமிழ் நாட்டு மக்களின் குடும்பப் பெண்” என்ற அடையாளத்துடன் மக்களின் மனதில் பதிந்தவர் அவர். இந்நிலையில், தேவயானியைப் பற்றி அவரது கணவரும் பிரபல இயக்குநருமான ராஜகுமாரன் சமீபத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பேச்சு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


தேவயானியுடன் நிகழ்ந்த தனது திருமணம் குறித்து பேசிய ராஜகுமாரன், “நான் கல்யாணம் பண்ணது எவ்வளவு பெரிய அருமையான நல்ல விஷயம் தெரியுமா? எங்கயோ ஒரு ஊரில வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டிய ஒரு பொண்ணை, சாதாரணமா சென்னைக்கு நடிக்க வந்த ஒரு பெண்ணை, தமிழ் நாட்டின் மருமகளா ஆக்கியது எவ்வளவு பெருமை. 

இன்னிக்கும் தேவயானி தமிழ் நாட்டு மருமகளா இருக்கிறது கடவுள் கொடுத்த அனுக்கிரகம். பணம், பெயர், புகழை சம்பாதிக்கலாம் ஆனா, நாட்டின் மருமகள் ஆகிற ஒரு பாக்கியம் எவ்ளோ பேருக்கு அமையும். குஷ்பு, தேவயானி, ஜோதிகாவுக்கு தான் அது அமைஞ்சது.” என்று கூறியுள்ளார். 

அவரது இந்த வார்த்தைகள், தேவயானியை மதிக்கும் விதமாகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை பெருமையுடன் நினைவுகூரும் வகையிலும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement