சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அருணின் அம்மாவின் இறப்பு வீட்டிற்கு முத்து செல்லும் நிலையில், அருண் அவரை உள்ளே செல்ல விடாமல் தடுக்கிறார். அனைவரும் சமாதானம் சொல்லியும், அருண் கேட்க மறுக்கிறார்.
மேலும், முத்துவின் பிரண்ட் ஆக்சிடென்ட் பண்ணினாலும், அதை முத்து சொல்லித்தான் அவன் செய்திருப்பான். என்னோட அம்மா இறப்புக்கு காரணம் முத்துதான் என்று முத்து மீது கடுமையான பழி சுமத்துகிறார். இதனால், முத்து அருணின் அம்மாவை கடைசியாக கூட பார்க்க முடியாமல் அங்கிருந்து திரும்பிச் செல்கிறார்.
அதற்குப் பிறகு, நீத்துவின் ரெஸ்டாரண்டை அப்பாதான் ஆட்கள் வைத்து அடித்து நொறுக்கியது என்ற உண்மை ஸ்ருதிக்கு தெரிய வருகிறது. இந்த விஷயத்தை ஸ்ருதி, மீனாவுக்கு போன் செய்து தெரிவிக்கிறார்.

அதே நேரத்தில், ஏற்கனவே விஜயா முத்து மீது குற்றம் சுமத்திக் கொண்டிருக்க, ஸ்ருதியின் கால் வந்ததும், நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஸ்ருதியின் அப்பாவே காரணம் என்று மீனா உண்மையை வெளிப்படுத்தி விஜயாவின் வாயை அடைக்கிறார்.
பின்னர், செல்வத்தின் மனைவியும் பிள்ளையும் வந்து, 'செல்வத்தை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என்று அழுது புலம்புகின்றனர். அண்ணாமலையும், செல்வம் மீது எந்த தப்பும் இல்லை, இது ஒரு விபத்துதான். அவர்களுக்கு முடிந்த உதவியை செய் என்று முத்துவிடம் சொல்கிறார்.
இறுதியாக, ஸ்ருதி வீட்டிற்கு சென்ற ரவி, உங்க பொண்ணோட லைஃப்ப காப்பாத்த யார வேணும்னாலும், என்ன வேணும்னாலும் செய்வீங்களா? நீத்துவின் ரெஸ்டாரண்ட் செலவு 4 லட்சம், ஹாஸ்பிடல் பில் 5 லட்சம்… மொத்தம் 9 லட்சம் நீங்க தான் கொடுக்கணும் என்று கோபமாக பேசிவிட்டு செல்கிறார்.
இதனால் உடைந்துபோன ஸ்ருதி, என்னோட வாழ்க்கையை காப்பாத்துறேன்னு சொல்லி நீங்க தான் கெடுத்து வச்சிருக்கீங்க என்று தன் பெற்றோருடன் சண்டை போடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!