• Feb 03 2026

நடிகர் ராம் சரணுக்கு இரட்டை குழந்தைகள்..! மருத்துவமனை நோக்கி படையெடுத்த ரசிகர்கள்

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினர் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். அவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ராம்சரணின் தந்தை, நடிகர் சீரஞ்சிவி தெரிவித்தார்.

ராம் சரண், உபாசனா தம்பதியினர் 2012-ம் ஆண்டு திருமணம் செய்தனர். அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவரான உபாசனா, ராம்சரணுடன் பல ஆண்டுகளாக நண்பராக இருந்தவர். பின்னர் காதல் வளர்ந்து, இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர். 

எனினும் நீண்ட காலம் திருமண வாழ்வை தனியா என்ஜாய் பண்ணிய அவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பின் 2023-ம் ஆண்டு  முதல் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு கிளின்காரா என்ற பெயர் சூட்டினர்.


2025-ம் ஆண்டு அக்டோபரில் உபாசனா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். பிறகு, அவரது வளைகாப்பு பிரமாண்டமாக நடந்தது. மருத்துவர்கள் உறுதிப்படுத்தியபடி, அவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி இரவு இரட்டை குழந்தைகள் பிறந்தன.


இந்த நிலையில், நடிகர் ராம் சரணுக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவலை அறிந்த அவருடைய ரசிகர்கள் , காலை முதல் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடி, ராம்சரணுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement