• Apr 15 2026

காந்தாரா வெற்றி; தனது சம்பளத்தை உயர்த்திய ரிஷப் ஷெட்டி.! எத்தனை கோடி தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் படம் இதுவரை ரூ.710 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 

நாட்டுப்புற கலாச்சாரம், தெய்வீக நம்பிக்கைகள் மற்றும் மண் மணம் வீசும் கதை சொல்லல் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதை கவர்ந்த இப்படம், ரிஷப் ஷெட்டியை தேசிய அளவில் மிகப் பெரிய ஸ்டாராக மாற்றியுள்ளது.

இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ரிஷப் ஷெட்டி ஆன்மிகப் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ‘தக்‌ஷண காசி’ என அழைக்கப்படும் முக்கிய ஆன்மிக தலத்திற்குச் சென்று வழிபாடு செய்தார்.


‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை ஒரு கலாச்சார மற்றும் ஆன்மிக அனுபவமாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதற்காகவும், உலகம் முழுவதும் கிடைத்த பேராதரவுக்கும் நன்றியும் தெரிவித்து இருந்தார் ரிஷப் ஷெட்டி.

இந்த நிலையில்,  காந்தாரா வெற்றியை தொடர்ந்து நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சம்பளத்தை 80 கோடியாக உயர்த்தியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜெய் ஹனுமான் மற்றும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் படங்களை மட்டுமே கவனம் செலுத்தி வரும் இவர், தென்னிந்தியாவின் காஸ்ட்லி சூப்பர் ஸ்டார் ஆக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement