• Apr 14 2026

எவ்வளவு கோடி கொடுத்தாலும் அவருக்கு ஜோடியா நடிக்காதீங்க.! பார்வதிக்கு ப்ரீ அட்வைஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த  ஆண்டு தொடங்கி, சமீபத்தில் முடிவடைந்தது. இந்த சீசனில் திவ்யா கணேஷ் தைட்டில் வெற்றி பெற்றார், அதே நேரத்தில் சபரிநாதன் முதல் ரன்னராகவும், விக்கல்ஸ் விக்ரம் இரண்டாம் ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த சீசன் தொடக்க கட்டத்தில் சலிப்பாக இருந்தது. போட்டியாளர்களின் நடிப்பு மற்றும் நிகழ்ச்சிகள் எதிர்பார்த்த அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், பிறகு பரபரப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. 

குறிப்பாக, பார்வதி எதிர்பார்த்தபடி டைட்டில் வெற்றியாளராக வரவில்லை. அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சக போட்டியாளரான சாண்ட்ரா கார் டாஸ்க்கில் தாக்கப்பட்டதும், சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு வழிவகுத்தது.


இந்த நிலையில், பார்வதி கலந்து கொண்ட தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிரவீனும் கலந்து கொண்டுள்ளார். இதன் போது பார்வையுடன் பேசிய பிரவீன்,  எத்தனை கோடி கொடுத்தாலும் திவாகருடன் சேர்ந்து மட்டும் ஹீரோயினாக நடிச்சிராதீங்க என்று திவாகர் பற்றி  பேசி, அவரை போல நடித்தும் காட்டியுள்ளார். 

மேலும் நான் அந்த நேரம் பிக் பாஸில் எலிமினேட் ஆகி வெளியேறிய போது நீங்க எமோஷனல் ஆனதை நான் பார்த்தேன். நான் அந்த நேரத்தில் வெளியேறாவிட்டால் நீங்கள் வெளியே போய் இருப்பிங்க என்று சொன்னதும், இல்லை அரோரா போயிருப்பார் என்று  பார்வதி கூறிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement