• Apr 17 2026

திரில்லர் கதையுடன் ரசிகர்களை மிரட்டவரும் பாவனா.. வெளியானது "அனோமி" பட ட்ரெய்லர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களையும், வலுவான நடிப்பையும் தேர்ந்தெடுத்து வரும் நடிகை பாவனா, மீண்டும் ஒரு முறை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் நடித்துள்ள புதிய திரில்லர் திரைப்படமான ‘அனோமி’ (Anomie) தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இந்த படத்தில் பாவனா, இதுவரை நடித்திராத வகையில், ‘சாரா’ என்ற புதிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். கதாபாத்திர ரீதியாகவும், மனநிலை சார்ந்த நடிப்பிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் படமாக ‘அனோமி’ உருவாகியுள்ளது.

‘அனோமி’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ளார். தனது முதல் படத்திலேயே திரில்லர் ஜானரை தேர்வு செய்துள்ள அவர், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகளின் மூலம் ரசிகர்களை கட்டிப்போடும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அத்துடன், இப்படத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், ‘அனோமி’ படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி சில மணி நேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement