விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான பல தொடர்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம், குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தை பிடித்து உயர்ந்தவர் ரச்சிதா மகாலட்சுமி.
குறிப்பாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் ரச்சிதா மகாலட்சுமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடரில் அவரது நடிப்பு மற்றும் திரையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் மூலம் வீடு தோறும் அறிமுகமான ரச்சிதா, தனக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.
சின்னத்திரையில் நிலைபெற்ற பின்னர், வெள்ளித்திரையிலும் பிரபல நடிகையாக மாற வேண்டும் என்ற கனவையும் ரச்சிதா மகாலட்சுமி கொண்டிருந்தார். அதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள், தைரியம் மற்றும் நேர்மை ஆகியவை ரசிகர்களிடையே மேலும் பிரபலமாக்கின..

தற்போது ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையிலும் பிஸியான நடிகையாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில், சமூக வலைதளங்களிலும் மிகுந்த ஆக்டிவாக இருந்து, தனது அன்றாட வாழ்க்கை, படப்பிடிப்பு அனுபவங்கள் மற்றும் ஃபேஷன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பிக் பாஸ் மூலம் ரச்சிதா மகாலட்சுமிக்கு கிடைத்த தோழி தான் திருநங்கையான சிவின். தற்போது அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் சிவின்.
மேலும் 'பிக் பாஸ் மூலம் வாழ்க்கை எனக்கு கொடுத்த மிகச்சிறந்த பரிசுகளில் ஒன்று' என ரச்சிதா பற்றி உருக்கமான கேப்ஷன் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவித்து வருகின்றன.
Listen News!