• Apr 15 2026

எனக்கும் தனுஷுக்கும் இடையில் உள்ள உறவு இதுதான்..? முதன் முறையாக மௌனம் கலைத்த மிருணாள்.!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகன்களை பெற்ற இந்த தம்பதியினர், சில காரணங்களால் பின்னர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்தப் பிரிவுக்குப் பிறகும் இருவரும் அமைதியாகவே வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐஸ்வர்யாவை பிரிந்ததிலிருந்து தனுஷ் சிங்கிளாகவே இருந்து வருகிறார். ஆனாலும், நடிகை மிருணாள் தாகூர் உடன் தனுஷ் காதலில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கின. 

மேலும், இன்ஸ்டாகிராமில் மிருணாளும் தனுஷின் சகோதரிகளும் ஒருவரையொருவர் ஃபாலோ செய்தது, இந்த கிசுகிசுவை மேலும் வலுப்படுத்தியது. அதோடு, இருவரும் ஒரே அறையில் இருந்ததாக கூறப்படும் புகைப்படம் ஒன்று வைரலானது.


இந்த நிலையில், தொடர்ந்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மிருணாள் தாகூர் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார். 

அவர் கூறுகையில், “என்னைப் பற்றியும் தனுஷைப் பற்றியும் பரவும் தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் இல்லாத பொய்கள். தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டுமே. எங்களுக்குள் இருப்பது தொழில்முறை உறவுதான்” என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலம், தனுஷ்–மிருணாள் காதல் வதந்திகளுக்கு தற்போது முடிவு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement