தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றது. அந்த வகையில், இயக்குனர் டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகும் ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் தற்போது அதிகம் கவனத்தை ஈர்க்கிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 9, 2026 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபல நடிகர் டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்துள்ளார். தற்போது, படக்குழு கயாடு லோகரின் லுக்கை அதிகாரபூர்வமாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கயாடு லோகர் தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் தனது திறமை மற்றும் நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தில் அவரின் நடிப்பு மற்றும் ஸ்டைலிஷ் லுக், டொவினோ தாமஸுடன் இணைந்து புது கெமிஸ்ட்ரியை உருவாக்கியுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!