• Apr 15 2026

ராஜி கிட்ட ரொமான்ஸையும் கொட்டித் தீர்க்கும் கதிர்.! நாடகமாடி காரியத்தை சாதிக்கும் கோமதி

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜியோட கையைப் பிடித்து நீ ஏன் இண்டைக்கு இவ்வளவு அழகா இருக்க என்று கேட்கிறார். அதுக்கு ராஜி எதுவுமே கதைக்காமல் அமைதியா இருக்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம் கோமதி காய்ச்சல் வந்த மாதிரி நடிச்சுக் கொண்டிருக்கிறார். பின் சரவணன் வந்து கோமதியை தொட்டு பார்த்திட்டு காய்ச்சலே இல்ல என்கிறார்.

அதைப் பாண்டியன் கேட்டுக் கொண்டிருக்கிறார். பின் கோமதி கை, கால் எல்லாம் ரொம்ப வலிக்குது கொஞ்சம் பாருங்களேன் என்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் சரவணனை கடைக்கு வரச் சொல்லுறார். பின் அரசி கோமதியைப் பார்த்து அப்பா பேசணும் என்று தானே இப்புடி எல்லாம் நடிச்சுக் கொண்டிருந்த என்று கேட்கிறார். 


அதனைத் தொடர்ந்து கோமதி அரசியைப் பார்த்து உங்க அப்பாவுக்கு நான் தேவையில்லாத பொண்டாட்டி ஆகிட்டன் என்று வருத்தமாகச் சொல்லுறார். அதுக்கு அரசி அம்மா நீ நடிக்கிறத நானே கண்டுபிடிச்சிட்டன் அவருக்கு விளங்கியிருக்காத என்கிறார். அதுக்கு கோமதி அவருக்கு அதெல்லாம் புரிஞ்சிருக்காது அவர் என்மேல இருக்கிற கோபத்தில தான் இப்புடி போயிருக்கார் என்கிறார்.

பின் அரசி அப்பாவுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கச் சொல்லுறார். மேலும், ரொமான்டிக்கா try பண்ணச் சொல்லுறார் அரசி. அதனை அடுத்து கதிர் ராஜியை கிளாஸுக்கு கூட்டிக் கொண்டு போய் சேர்த்தது விடுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement