• Apr 14 2026

நடிகை ரேஷ்மா முரளிதரனுக்கு சிறந்த நடிகை விருது.! எந்த சீரியலுக்கு தெரியுமா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு அரசு வழங்கும் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது, சின்னத்திரை பிரபலமான பூவே பூச்சூடவா தொடரில் நடித்ததற்காக ரேஷ்மா முரளிதரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நடிகை ரேஷ்மா தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில், நடிப்பு என்பது வெறும் வேடிக்கையல்ல. அது உணர்ச்சி, நேர்மை, பகிர்வு மற்றும் உறவு ஆகியவற்றின் மையமாக இருக்க வேண்டும் .

ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு வசனமும், ஒவ்வொரு மௌனமும்  என்னை கலைஞராகவும், மனிதராகவும் வடிவமைத்தது என்றார்.


ஜீ தமிழ் மற்றும் பூவே பூச்சூடவா படக்குழுவின் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் ரேஷ்மா மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். ரசிகர்கள் தனக்கு அளித்த அன்பும் நம்பிக்கையும்  அவரை மேலும் வளரச் செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த விருது ஒரு முடிவு அல்ல. இது உண்மையான, ஆழமான மற்றும் மனத்துடிப்புடன் கதைகளை தேர்வு செய்து நடிப்பதற்காக எனக்கு வழங்கப்பட்ட  ஊக்கமாகும் என உணர்வு பூர்வமாக  தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement