• Mar 14 2026

கார் ஆக்சிடென்டில் பலியான அருணின் அம்மா; முத்து மீது விழும் பலி! டுடே எபிசோட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஸ்ருதியின் வீட்டிற்கு மீனா செல்கிறார். அங்கு, நீத்துவின் ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சனை குறித்து சொல்லுகிறார். மேலும் அந்த பிரச்சனைக்கு முத்துதான் காரணம் என ரவி சண்டை போட்ட விஷயத்தையும், தற்போது நீத்துவை மருத்துவமனையில் ரவியே கவனித்து வருகிறார் என்பதையும் மீனா சொல்லிவிட்டு, ரவியுடன் பேசுமாறு சொல்லி செல்லுகிறார்.   

இதற்கிடையில், நீத்துவின் ரெஸ்டாரண்டில் நடந்த சம்பவம் குறித்து முத்து மனதில் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வம் அங்கு வருகிறார். இதன்போது நீத்துவுக்கு நடந்தது சரிதான் என செல்வம் கூறிக்கொண்டு இருக்க, முத்து 'நீ தான் இதை செய்தீயா?' என்று கேட்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகிறது.

இதனால். என்னை சந்தேகப்பட்டுவிட்டாய், உனக்காகத்தானே நான் வந்தேன், நீ தான் கோவக்காரன் என்று முத்துவுடன் சண்டை போட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்படுகிறார் செல்வம் .


அதன்பின்னர், செல்வத்தின் கார் அருணின் அம்மா மீது மோதி விபத்துக்குள்ளாகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்கிறார். அங்கு இருந்த மீனா இந்த அதிர்ச்சி சம்பவத்தை பார்த்து உடனடியாக முத்துவுக்கு தகவல் தெரிவிக்கிறார். பின்னர் சீதாவுக்கும் இதை அறிவிக்கிறார்.

இறுதியாக, அருணின் அம்மாவின் இறுதிச்சடங்கில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில் முத்து மற்றும் மீனா மாலையை தூக்கிக் கொண்டு வரும்போது, அருன் வாசலில் அவர்களைத் தடுத்து நிறுத்தி, என் அம்மா இறக்க காரணம் முத்துதான் என முத்து மீது குற்றம் சாட்டுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement