தமிழ் சினிமாவின் பொக்கிஷமான நினைவுகளில் சில சம்பவங்கள், காலம் கடந்தாலும் ரசிகர்களிடையே தனி கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், நடிகை லதா சமீபத்தில் பகிர்ந்த ஒரு நினைவுச் சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் விஜயகுமார், மற்றும் நடிகை லதா இணைந்து நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படப்பிடிப்பு காலத்தில் நடந்த ஒரு ஆன்மீக பயணம் குறித்து அவர் கூறிய கருத்துகள், ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆயிரம் ஜென்மங்கள்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான படமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த், விஜயகுமார் போன்ற நடிகர்கள் வளர்ந்து வரும் நட்சத்திரங்களாக இருந்தனர்.

இந்த படத்தில் நடிகை லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பு நாட்களில் நடிகர்களிடையே இருந்த நட்பு இன்றைய கால சினிமாவுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது.
இந்த படப்பிடிப்பு காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த நடிகை லதா, “ரஜினி, நான், விஜயகுமார் மூன்று பேரும் சேர்ந்து பழனி முருகன் கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். அதை ரொம்ப பெருசா ஆக்கிட்டாங்க.. நல்ல வேளை இப்போ இருக்கிற மாதிரி யூடியூப் இல்ல.. இருந்திருந்தால் இஷ்டத்துக்கு போட்டு இருப்பாங்க.”என்று கூறியுள்ளார்.
அந்த காலத்தில் நடிகர்கள் கோவிலுக்கு செல்வது ஒரு சாதாரணமான விஷயமாகவே பார்க்கப்பட்டது. புகைப்படங்கள், வீடியோக்கள், விளம்பரங்கள் எதுவும் இல்லாத அந்த கால சூழலில், இது ஒரு எளிய ஆன்மீக பயணமாக மட்டுமே இருந்தது.
ஆனால், இன்றைய காலத்தில் ஒரு நடிகர் கோவிலுக்குச் சென்றாலே, அது வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது என்பதை லதா வலியுறுத்தியுள்ளார்.
Listen News!