• Apr 15 2026

மனுஷன் கொடுத்து வாழணும்.! விஜயகாந்தின் மனிதாபிமானத்தைப் பார்த்து கண்கலங்கிய பிரபலம்.!

shali / 3 months ago

Advertisement

Listen News!

விஜயகாந்த் என்ற பெயரை கேட்டவுடனே தமிழ் மக்களின் நினைவுக்கு வருவது, அவரது சினிமா சாதனைகள் மட்டுமல்ல, அதைவிட மேலாக அவரது மனிதாபிமானம், உதவும் மனம், எளிமை ஆகியவை தான். அரசியல், சினிமா, பொதுவாழ்வு என எந்த துறையிலும் அவர் நடந்து கொண்ட விதம், பலருக்கும் இன்று வரை ஒரு முன்மாதிரியாகவே இருக்கிறது.


இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பல படங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய ஜாக்குவார் தங்கம், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், விஜயகாந்தின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாக்குவார் தங்கம் தனது பேட்டியில்,“1978-ல் நான் கேப்டனை முதன்முறையாக சந்தித்தேன். அப்பவே அவருடைய ஆபிசில் நிறைய பேர் வந்து சாப்பிடுவாங்க… எல்லாமே கஷ்டப்படுறவங்க. எதுக்கு தினமும் சாப்பாடு போடுறீங்கன்னு கேட்டேன். 


அதுக்கு, மிருகம் எடுத்து வாழும்… மனுஷன் கொடுத்து வாழ முடியும். நாம மனுஷனா இருக்கோம்ல கொடுத்து வாழ்வோம்னு சொன்னார். அதைக் கேட்டதும் கண்ணு கலங்கிடுச்சு." என்று கூறியுள்ளார். 

மேலும், " புரட்சித்தலைவர் தான் இப்படி பண்ணுவார் என்று சொன்னதுக்கு... விஜயகாந்த், நானும் அவரை மாதிரி வந்தா, நல்லா பண்ணுவேன்." என்று தெரிவித்ததாக ஜாக்குவார் பேட்டியின் போது கூறியுள்ளார். 

Advertisement

Advertisement