சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ மற்றும் மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ ஆகிய திரைப்படங்கள் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் ’லால் சலாம்’ படத்தின் வசூலை விட ’லவ்வர்’ படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாகவும் அதுமட்டுமின்றி ’லவ்வர்’ படத்திற்கு அனைத்து தரப்பினரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் ’லால் சலாம்’ படத்திற்கு முக்கிய ஊடகங்கள் கூட நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தாலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 40 நிமிடங்கள் வருவதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு விருந்தை அளித்து இருப்பார் என்று தான் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்தனர். ஆனால் படத்தில் ரஜினியின் ஒரு சில மாஸ் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் ஏமாற்றமாக இருப்பதாக ரஜினி ரசிகர்களே கூறினர்.
இந்த நிலையில் இன்னொரு பக்கம் ’லவ்வர்’ படத்திற்கு இளைஞர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. எனவே கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படங்களில் முதலிடத்தை மணிகண்டனின் ’லவ்வர்’ பெற்றதையடுத்து
நேத்து பீல்டுக்கு வந்த மணிகண்டன் கிட்ட தோத்துட்டிய தலைவா என்று நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி சிறப்பு தோற்றத்தில் நடித்து ஒரு படத்தை எப்படி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை எங்களிடம் கற்று கொள்ளுங்கள் என கமல்ஹாசன் ரசிகர்களும் இதில் புகுந்துள்ளனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’சதிலீலாவதி’ மற்றும் ’மகளிர் மட்டும்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த படம் படுதோல்வி அடைந்ததையும் கமல் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இதனால் இணையதளம் பக்கமே செல்ல முடியாத நிலையில் ரஜினி ரசிகர்கள் இருப்பதாக தெரிகிறது.
Listen News!