பழங்குடி இனத்தை சேர்ந்த ரஷ்மிக்கா மந்தனா தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையினால் இன்று முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். சமீபகாலமாக பெரிய வசூல் கொடுக்கும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் அண்மையில் கால் வலி பாராமல் சினிமாவிற்காக பாடுபட்டு வந்தார். புஷ்பா 2 அபூர்வ வெற்றியின் பின்னர் மேலும் அதிகம் பேசப்பட்டு வரும் இவர் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பழங்குடி சமூகத்தினர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தற்போது தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற பெங்களூர் திரைப்பட விழாவில் ரஷ்மிக்காவிற்கு அழைப்பு விடுத்த போதும் அவர் வர மறுத்து விட்டதாகவும் மேலும் அவர் தனது வீடு கைதராபாத்தில் உள்ளது. கர்நாடகா எங்கிருக்கிறது என தனக்கு தெரியாது என கூறியுள்ளார்.
இதனால் பொங்கி எழுந்த கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கர்நாடகாவையும் கன்னட மொழியையும் ரஷ்மிக்கா புறக்கணித்ததாகவும் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேணும் என கூறியது சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதை தொடர்ந்து இந்த விவரம் குறித்து பேசிய கர்நாடக முதல் அமைச்சர் "உங்களது பிரச்சனைகளுக்கு என்னிடம் தானே வரவேண்டும் அப்பொழுது உங்களை பார்த்து கொள்கின்றேன் ." என பகிரங்கமாக மெரட்டல் விடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது அவரது உரிமை தனிப்பட்ட விஷயம் எனவும் இவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கடிதம் போடப்பட்டுள்ளது.
Listen News!