• Dec 18 2025

இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக 'லியோ'..! அப்போ படம் ஓடலயா..! கலாய்க்கும் நெட்டிசன்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் தற்போது உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் லியோ படம் தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில்  முன்வைக்கப்பட்டு தான் வருகின்றது. 

லியோ திரைப்படம் வெளியாகி மொத்தமாக 550 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அண்மையில் அதற்கு வெற்றி விழாவும் நடத்தப்பட்டது.


இந்த நிலையில், லியோ திரைப்பம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அத் திரைப்படத்தை சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக சன் டிவி விளம்பரம் செய்துள்ளது.

இதனை பார்த்த படம் பார்க்க செல்லாத சிலர் மகிழ்ச்சி அடைந்தாலும், படம் பார்த்த பலர் இவ்வளவு சீக்கிரமா இந்த படத்த டிவில போடுறாங்க என்டா படம் ஓடல போல என பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் லியோ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement