• Jan 19 2025

'டேய் இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு..' பிக்பாஸ் பிரதீப்பை வேணும் என்றே அசிங்கப்படுத்திய பிரபலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அங்குள்ள சக பெண் போட்டியாளர்களுக்கு ஆபத்தாக உள்ளார் என்ற குற்றச்சாட்டு காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார். 

பிக் பாஸ் வீட்டிலிருந்த பிரதீப் வெளியேற்றத்திற்கு மாயா, பூர்ணிமா, ஐஷு, அட்சயா, ரவீனா மற்றும் ஜோவிகா ஆகியோர்கள் தான் முக்கிய காரணம் என்பது யாவரும் அறிந்ததே..

அத்துடன், கடந்த வார நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், பிரதீப் வெளியேற்றத்திற்கு நீங்க கொடுத்த ரெட் கார்டு தான் காரணம் என்றும் என்னையும் உங்க கூட பிளேயர் ஆக சேர்க்காதீர்கள். உங்கள் முடிவின் படி தான் அவரை வெளியேற்றினோம் என சொல்லி இருந்தார்.


இந்த நிலையில், தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் மட்டும் அவமானம் கிடைக்கவில்லை. நான் நேசித்த சினிமா துறையிலும் பல அவமானங்கள் கிடைத்திருக்கிறது என தனது சோக கதையை பேட்டி ஒன்றில் வழங்கியுள்ளார் பிரதீப்.

அதன்படி அவர் கூறுகையில், என்னுடைய முதல் படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு பசி வந்ததால் நான் சாப்பிட சென்றேன், புரொடக்ஷனில் சாப்பாடு போடுபவர் என்னை பார்த்தவுடன் வாங்க சார் என்று அழைத்தார்.

அப்போது புரொடக்ஷன் மேனேஜர் அங்கு வந்தார், அவர் டேய் இவனுக்கெல்லாம் எதுக்குடா சாப்பாடு போடற என்று திட்டினார். அன்றில் இருந்து நான் அந்த செட்டில் சாப்பிடவே இல்லை என்று பேசியிருக்கிறார்.



 

Advertisement

Advertisement