• Mar 31 2025

"நீங்க சூப்பரா நடிச்சிருக்கீங்க..!" விக்ரமின் நடிப்பைப் பாராட்டித் தள்ளிய முன்னணி நடிகர்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

திரையரங்குகளில் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் “வீர தீர சூரன்”. விக்கிரம் நடித்திருக்கும் இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், இப்பொழுது இந்தப் படத்தை பார்த்து அசந்த போன நடிகர் பற்றிய தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சினிமா உலகத்தில், ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நடிகர் மீது பெரும் மரியாதை இருக்கும். அப்படித்தான் சிவகார்த்திகேயனுக்கும் விக்கிரமுக்கும் இடையே ஒரு அழகான உறவு இருந்து வருகின்றது. அந்தவகையில் தற்பொழுது வெளியான நிகழ்வு ரசிகர்களைடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குறிப்பாக வீர தீர சூரன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த சிவகார்த்திகேயன், படம் முடிந்தவுடன் நேராக விக்கிரம் அவர்களை சந்தித்து உணர்ச்சிகரமான வார்த்தைகளில் பாராட்டி, “சார், சூப்பர் சார்! நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க...!” என்று சொல்லிக் கட்டியணைத்துப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பின் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விக்கிரமும் சிவகார்த்திகேயனும் இந்த சம்பவத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளனர்.

Advertisement

Advertisement