சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று,பார்வதி மீனாவுக்கு கால் எடுத்து விஜயா எப்பவும் ரோகிணியப் பணக்கார வீட்டுப்பொண்ணு என்று அவளப் பெருமையாப் பேசிட்டு உன்ன மட்டம் தட்டுறவா எல்லோ அவாவுக்கு இது தேவை என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா அப்புடி எல்லாம் ஒன்னும் இல்ல ஆன்டி அவங்க என்ன எப்புடி வேணும் என்றாலும் பாக்கட்டும் நான் எப்பவுமே அவங்கள மரியாதையாத் தான் பாக்குறேன் என்றார்.
இதைத் தெடர்ந்து முத்து வந்து என்ன மீனா யாருகிட்ட பேசிட்டு இருந்த என்று கேக்கிறார். அதுக்கு மீனா பார்வதி ஆன்டி கூட தான் பேசிட்டு இருந்தேன் என்று சொல்லுறார். மேலும் அத்தைக்கு இன்னும் ரோகிணி மேல இருந்த கோபம் குறையல என்று சொல்லுறார்.
இதனை அடுத்து மீனா இதைப் பற்றி மனோஜ் கிட்ட பேசினீங்களா என்று முத்துவப் பாத்துக் கேக்கிறார். அதுக்கு முத்து அவன் என்ன பேசினாலும் அமைதியவே இருக்கான் என்றார். மேலும் இந்தப் பிரச்சனைய முடிக்க பாட்டி தான் வரனும் என்று சொல்லுறார். அதுக்கு மீனா அவசரப்பட்டு அவங்கள கூப்பிடவேணாம் என்று சொல்லுறார்.
அதைக் கேட்ட முத்து இல்ல மீனா அம்மா பயப்படுற ஒரே ஆளு பாட்டி தான் அவங்கள கூப்பிட்டாத் தான் எல்லாம் சரிவரும் என்கிறார். அதனைத் தொடர்ந்து மீனா பாட்டிய கூட்டிக் கொண்டு வாறது தான் சரியான முடிவு அது எனக்கும் தெரியும் அதுக்கு முதல் மாமாகிட்ட இதைபற்றிக் கதைச்சிட்டு சொல்லுவோம் என்கிறார். இதைத் தொடர்ந்து மனோஜ் குடிச்சிட்டு பொலிஸிடம் பிடிபடுகிறார். இதைக் கேட்ட அண்ணாமலை ஷாக் ஆகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!