மலையாள சினிமாவில் தனித்துவமான அழகும் இயல்பான நடிப்பும் கொண்ட நடிகையாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அனுபமா பரமேஸ்வரன். 2015ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தேசிய அளவில் பிரபலமானார்.

‘பிரேமம்’ வெற்றியின் பின்னர், அனுபமா பல மொழிப் படங்களில் நடித்து தனது ரசிகர் வட்டத்தை மேலும் விரிவாக்கினார். குறிப்பாக தமிழில் கொடி, தள்ளிப் போகாதே, டிராகன், சைரன் போன்ற படங்களில் நடித்த அவர், தமிழ் ரசிகர்களிடமும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் சமூக வலைத்தளங்களில் மிகுந்த ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். தனது Instagram பக்கத்தில் அடிக்கடி தனது புதிய Photo shoots, திரைப்பட அப்டேட்கள், பயணப் புகைப்படங்கள், மற்றும் கவர்ச்சியான ஃபேஷன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அனுபமா தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பச்சை நிற சாறி புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சாறி, அவருடைய அழகை இன்னும் அதிகமாக பிரதிபலிக்கச் செய்துள்ளது. அத்துடன், பாரம்பரியத்துடனான நவீன ஸ்டைல் கலந்த இந்த look இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!