• Apr 15 2026

‘மூக்குத்தி அம்மன் 2’ குறித்த சூப்பரான தகவலை வெளியிட்ட ரெஜினா... என்ன தெரியுமா.?

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் சிறப்பு இடத்தை பிடித்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம், நயன்தாராவின் அசத்தலான நடிப்பும், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோரின் நகைச்சுவை என்பன இணைந்து, குடும்பங்களிடையே மிகப்பெரிய ஹிட்டானது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி, படத்தின் தொடர்ச்சியாக ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாக்க முடிவெடுத்துள்ளார். முதல் பாகம் ரசிகர்களிடையே பெற்ற பிரபலத்தை கருத்தில் கொண்டு, இரண்டாம் பாகத்திலும் புதிய கதை, புதிய பாத்திரங்கள், புதிய நட்சத்திரங்கள் என பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் ரெஜினா, தனது படப்பிடிப்பு அனுபவத்தைப் பேசியுள்ளார். 


ரெஜினா தனது சமீபத்திய பேட்டியில், "படப்பிடிப்பு செம ஸ்பீட்ல போய்ட்டிருக்கு. என்னுடைய ஷெட்யூல் முடிஞ்சிருச்சு. இதுவரைக்கும் எந்தப் படத்திலயும் கிடைக்காத அனுபவம் கிடைச்சிருக்கு. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவம். ரொம்ப எக்ஸைட்டிங்கா இருந்திச்சு. படம் ரிலீஸுக்கு காத்திருக்கேன்." எனக் கூறியுள்ளார்.

அவருடைய இந்தக் கருத்துகள், ‘மூக்குத்தி அம்மன் 2’ பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. படக்குழுவினர் கதாபாத்திரங்கள் தொடர்பான தகவல்களை ரகசியமாக வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement