• Mar 12 2026

படிக்க முடியாத வருத்தத்தை... 75 மாணவர்கள் மூலம் பூர்த்தி செய்தேன்.! பிளாக் பாண்டி ஓபன்டாக்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பாலும் நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை ஈர்த்த நடிகர்களில் ஒருவர் பிளாக் பாண்டி. இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சவால்கள் மற்றும் சமூகப் பணிகள் குறித்து திறந்த மனதுடன் பகிர்ந்துள்ளார். அவரது அனுபவங்களும் மனிதநேயமும், சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது.


பிளாக் பாண்டி தனது பேட்டியில், கல்வி எப்படி ஒருவரின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய மிகப்பெரிய சக்தி என்பதை உணர்ச்சியுடன் தெரிவித்தார்.

அவர் அதன்போது , " உலகத்தில கல்விக்கு நிகர் எதுவுமே இல்ல. கல்வி தான் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும். நான் பத்தாவது பெயில். என்னால படிக்க முடியல என்ற ஆதங்கத்தில என் தங்கச்சிய படிக்க வைச்சிருக்கேன். மேலும் என்னுடைய உதவும் மனிதன் அறக்கட்டளை மூலமாக 4 இலங்கை மாணவிகளை கல்லூரியில் படிக்க வைச்சிருக்கேன். நல்ல உள்ளங்களின் உதவியால் 75 பேருக்கு மேல் படிக்க வைத்துள்ளேன்." என்றார்.


அவரது அறக்கட்டளையால் பல ஏழை மற்றும் சாதனையைக் கனவாகக் காணும் மாணவர்கள் இன்று உயர்கல்வி படித்து வருகின்றனர். இதனால் பிளாக் பாண்டி ரசிகர்களிடையே ஒரு நடிகராக இல்லாமல்… மனித நேயச் சின்னமாக இருந்து வருகின்றார் என்பதை அறியமுடிகிறது.

Advertisement

Advertisement