நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி, மற்றும் விடாமுயற்சி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி போவதால் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் சமீபத்திய பேட்டில் சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் படம் சென்சார் செல்லாததால் காலதாமதம் ஆகும் என அறிவிப்பு வெளியானது இதனால் ரிலீஸ் திகதியை தள்ளிப் போட்டுள்ளது லைக்கா நிறுவனம். இது குறித்து நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதாவது " அஜித்துடன் 16 திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி இருக்கேன். விடாமுயற்சி சாவடிகா பாடல் ரொம்ப ஸ்பெஷல். பயந்துகிட்டே தான் இந்த பாட்டுக்கு பண்ணுனேன் பட் நல்லா செட் ஆகிருச்சு" என்று கூறியுள்ளார்.
மேலும் "அஜித் ரசிகர்களுடைய நீண்ட நாள் எதிர்பார்ப்பு முதலாக பாடல் தான் ரிலீஸ் என்று சொல்லும் போது அதை சரியா செய்யணும் என்ற ஒரு யோசனையில் செய்தேன், வெளியாகி எல்லாருக்குமே புடிச்சி இருக்கு அது சந்தோசம். எனக்கு அஜித்தை ரொம்ப புடிக்கும் எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு. இந்த படத்துல இவரு ஒரு பாட்டுக்கு செம்மையா டான்ஸ் ஆடி இருக்காரு. அது அஜித் ரசிகர்களுக்கு சப்ரைஸ்சா இருக்கும்.
மேலும் கூறிய இவர் " இயக்குநருக்கும் - அஜித் சாருக்கும் சண்டை அதனாலதான் படம் லேட்டாகுது அப்டினு பேசுறாங்க அது எல்லாம் பொய் வதந்தி அவரே இதான் சொல்லுவாரு "யார் என்ன சொன்னாலும் கேட்காத படம் ஹிட் ஆகுனா எல்லாருக்குமே புடிக்கும்" என்று சொல்லுவாரு. லேட்டாகுறதுக்கு வேற காரணம் இருக்கும் இதுல தேவையில்லாம வதந்தி பரப்புறது தேவையில்லை, விடாமுயற்சி படம் ரிலீசாகும் சூப்பரா இருக்கும்" என்று கூறியுள்ளார்
Listen News!