வெள்ளித் திரையில் ஒவ்வொரு வாரமும் புது புது படங்கள் வெளியாகக் கொண்டு உள்ளன. இதில் தியேட்டருக்கு நேரிலே சென்று படம் பார்த்து மகிழும் ரசிகர்கள் ஒருபுறம் இருந்தாலும் அந்தப் படம் ஓடிடியில் ரிலீஸாக மட்டும் காத்திருந்து பார்க்கும் ரசிகர்களும் ஏராளம்.
இந்த நிலையில், இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் என்னென்ன படம் எந்தெந்த திகதிகளில் வெளியாகின்றது என்பதை பார்ப்போம்.
கங்குவா - சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் எதிர்பார்ப்புகளோடு வெளியான போதும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்திருந்தது. இந்த திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
d_i_a
ஜாலியோ ஜிம்கானா- சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் நகைச்சுவை நிறைந்த கதை களத்தில் உருவாகியிருந்தது. இந்த படம் கடந்த 30ஆம் தேதி ஆகா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ரீயூனியன் - இந்த திரைப்படம் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மாளிகையில் நடைபெற்ற கொலையை அடையாளம் காணும் வகையில் உருவாக்கப்பட்ட மர்மம் நிறைந்த நகைச்சுவை படமாகும். இந்த படம் நேற்று 1ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
தி பிளாக் ஸ்விண்ட்லர் - மங்கா தொடரை அடிப்படையாகக் கொண்டு தனது குடும்பத்தை ஏமாற்றி மோசடி செய்தவர்களை பழிவாங்கும் ஒரு கேரக்டரை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படமும் நேற்று முதலாம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.
உப்பு புளி காரம் - பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, தீபிகா பரீனா போன்ற பலரின் நடிப்பில் வெளியான தொடர் தான் உப்பு புளி காரம். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரின் இறுதி எபிசோட் இன்றைய தினம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஆல் வி இமேஜின் அஸ் லைட் - கோலிவுட்டின் இளம் நாயகனான ஹிருது ஹாரூன் நடிப்பில் வெளியான இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இந்த படம் நாளை மூன்றாம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
ஆரகன்- இறுதியாக அருண் கே. ஆர் இயக்கத்தில் கவிப்பிரியா, மைக்கேல் தங்கதுரை நடித்த ஆரகன் திரைப்படம் புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நாளைய தினம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
Listen News!