தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஆரி அர்ஜுனன். நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், அதனைத் தொடர்ந்து மாயா, உன்னோடு கா, எல்லாம் மேல இருக்கவன், நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனதை விட பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மேலும் பிரபலம் அடைந்தார். அதன்படி, 2020-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் பட்டத்தை வென்றார். இதன் மூலம் அவருக்கு தனிப்பட்ட ரசிகர் வட்டாரம் உருவானது.
பிக் பாஸ் வெற்றிக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வரும் ஆரி, சமூக கருத்து கொண்ட கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல், தனது கருத்துகளை நேரடியாக வெளிப்படுத்தும் தன்மையாலும் அவர் அறியப்படுகிறார்.

மேலும், L R சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்த, '4த் ஃப்ளோர்' திரைப்படம், வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ஆரி அர்ஜுனன் இன்றைய தினம் தனது 41வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தற்போது அவருக்கு திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!