• May 20 2024

தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு…குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66.இப்படத்தை வம்சி இயக்குகின்றார் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்.

எனினும் கடந்தாண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது

மேலும் தளபதி 66 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரபு, ஷ்யாம் ஆகிய பல நடிக்கின்றனர். இப்படம் விஜய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்குமென்றும், அனைத்து விதமான ரசிகர்களுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் இப்படத்தை சார்ந்தவர்கள் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளரான தமன் மற்றும் நடிகர் சரத்குமாரும் இக்கருத்தை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் தளபதி 66 படத்தைப் பற்றிய அறிவிப்பை அடிக்கடி வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement