• Apr 28 2024

kpy குரேஷியின் மனைவியை பார்த்துள்ளீர்களா…இதோ புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் குரேஷி.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில் தான். பின் இவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். பல கனவுகளுடன் இலட்சியங்கள் உடன் சென்னைக்கு வந்தவர்களுள் குரேஷியும் ஒருவர் என்று தான் கூற வேண்டும்.இதன் பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிமிக்ரி செய்யும் திறமையை பயன்படுத்தி இவர் விஜய் டிவிக்குள் நுழைந்தார்.

அத்தோடு திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகின்றார். இதன் பின் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி 1 சீரியலில் துணை கதாபாத்திரத்தில் குரேஷி நடித்திருந்தார். எனினும் அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்து இருந்தார்.

அப்படியே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராக பங்கு பெற்று வருகின்றார். தற்போது இவர் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ரசிகர்களிடத்தே பெரும் ஆதரவை பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

இந்நிலையில் இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண்குழந்தையும் உள்ளது.இவ்வாறு இருக்கையில் இவரின் மனைவியின் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement